தமிழக மின்வாரிய ஊழியர்கள் கவனத்திற்கு.., இதை நிச்சயம் கடைபிடிக்கணும்.., வெளியான அறிவிப்பு!!!

0
தமிழக மின்வாரிய ஊழியர்கள் கவனத்திற்கு.., இதை நிச்சயம் கடைபிடிக்கணும்.., வெளியான அறிவிப்பு!!!
தமிழக மின்வாரிய ஊழியர்கள் கவனத்திற்கு.., இதை நிச்சயம் கடைபிடிக்கணும்.., வெளியான அறிவிப்பு!!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. எனவே தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 176 கோட்டங்களில் 15 பணியாளர்கள் வீதம் மொத்தம் 5000 பேர் 24 மணி நேரமும் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மேலும் மின்வாரிய அலுவலகங்களில் எப்போதும் பணியாளர்கள் இருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், கேஜிபி கிரேன்கள் உள்ளிட்ட உரிமையாளர்களின் தொலைபேசி எண்களை முன்பே கேட்டறிந்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பருவமழையினால் ஏதேனும் ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய மின் பணியாளர்கள் எந்த நேரத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here