தமிழ் காமெடி நடிகரின் டிவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்கள் – திகைப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்!!

0
தமிழ் காமெடி நடிகரின் டிவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்கள் - திகைப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்!!
தமிழ் காமெடி நடிகரின் டிவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்கள் - திகைப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்!!

பிரபல காமெடி நடிகர் மனோபாலாவின் டிவிட்டர் பக்கத்தில், ஆபாச படங்கள் பதிவிடப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச போட்டோக்கள் :

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் நடிகர் மனோபாலா. இதுவரை 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தற்போது விஜய்யுடன் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். ஜீ தமிழில் செம்பருத்தி தொடரில் நடித்து வந்த இவர், விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி அசத்தினார். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் அதிலிருந்து எலிமினேட் ஆனார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவரது ட்விட்டர் பக்கத்தில், அண்மையில் திடீரென ஆபாச புகைப்படங்கள் பதிவிடப்பட்டது.

இதனைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள், இதனை உடனே டெலிட் செய்யுமாறு வலியுறுத்தினார். இது குறித்து விளக்கமளித்த மனோபாலா, தனது ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து விட்டனர் என்றும், அவர்கள் தான் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here