கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மணிப்பூரில் மெய்டீஸ் இன மக்களுக்கும், குக்கி பழங்குடியின மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் தொடர்ந்து பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டு வந்து கொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில் அண்மையில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக சாலையில் இழுத்துச் சென்ற வீடியோ, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பல்லேல் நகரில் ஏற்பட்ட வன்முறையில் , 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது காங்குய் பகுதியில் பழங்குடியினத்தை சேர்ந்த 3 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இப்படி 4 மாதமாக தீர்வே காணாமல் பலரும் பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு இது வந்திருக்கும்? உடனே செக் பண்ணுங்க!!!