இந்த 3 பொருள் இருந்தா போதும் – ஒரு வாரத்துக்கு சைடு டிஷ் கவலையே இல்லை!! மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க!!

0

ஒரு வீட்டில் பெரும்பாலும் கணவன், மனைவி இருவருக்குமே வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் வீட்டில் இரவு நேரத்தில் வந்து சமைக்கும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால் கடையில் வாங்கி சாப்பிடும் நிலை ஏற்படும். தற்போது 3 பொருட்களை வைத்து எளிமையாக சைடு டிஷ் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மாங்காய் – 1

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

தயிர் – 1

கடுகு – தே. அளவு

பெருங்காயம் – தே. அளவு

எண்ணெய் – தே. அளவு

கருவேப்பிலை – தே. அளவு

மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

செய்முறை

முதலில் மாங்காயை சின்ன சின்னதாக நறுக்கி எடுத்து கொள்ளவும். அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து தாளித்து அதனை அந்த மாங்காயில் சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும்.

இதில் உங்களுக்கு விருப்பமானால் தயிர் சேர்த்து கொள்ளவும். இதில் தயிர் ஊற்றினால் 2 நாட்கள் வரை பயன்படுத்தி கொள்ளலாம். இல்லையெனில் 1 வாரம் வரை பயன்படுத்தி கொள்ளலாம். இது தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here