மான்செஸ்டர் அணியிலிருந்து ரொனால்டோ விலகல்…, சோகத்தில் ரசிகர்கள்…, ட்விட்டரில் வெளியிட்ட உருக்கமான பதிவு!!

0
மான்செஸ்டர் அணியிலிருந்து ரொனால்டோ விலகல்..., சோகத்தில் ரசிகர்கள்..., ட்விட்டரில் வெளியிட்ட உருக்கமான பதிவு!!
மான்செஸ்டர் அணியிலிருந்து ரொனால்டோ விலகல்..., சோகத்தில் ரசிகர்கள்..., ட்விட்டரில் வெளியிட்ட உருக்கமான பதிவு!!

மான்செஸ்டர் அணியிலிருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ விலகியதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இவர் ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரொனால்டோ:

கால்பந்து ரசிகர்களுக்கு இடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்ற FIFA உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நேற்று லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி சவூதி அரேபிய அணியிடம் தோல்வியடைந்தால் ரசிகர்கள் பலர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், சவூதி அரேபியா அரசு இதனை ஒரு நாள் விடுமுறை அளித்து கொண்டாடி வருகிறது. இந்நிலையில், ரொனால்டோ குறித்து தகவல் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஏற்கனவே, மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளர் எரிக் டென் ஹாக்கும், நட்சத்திர வீரரான போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இடையே பிரச்சனைகள் எழுந்து வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ரொனால்டோ விலகி உள்ளதாக, அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐசிசி T20 தரவரிசை வெளியீடு: முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட சூர்யகுமார் யாதவ்…, மற்ற இந்திய வீரர்களின் இடம்??

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, ரொனால்டோ தனது சமூக வலைதள பக்கத்தில், மான்செஸ்டர் யுனைடெட் அணியை விட்டு விலகினாலும், ரசிகர்களின் அன்பு என்றும் மாறாது என பதிவிட்டுள்ளார். மேலும், மீதமுள்ள லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதற்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 346 போட்டிகளில் விளையாடி 145 கோல்களை அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here