Wednesday, April 24, 2024

கோவிட்-19 காரணமாக உயிரிழந்த தன் தாய்க்கு பிரியாவிடை – மருத்துவமனை சுவரில் ஏறிய மகன்..!!

Must Read

தாயின் கடைசி தருணத்தில், தாய்க்கு பிரியாவிடை அளிக்க, அவரது அறையின் ஜன்னலில், மகன் ஏறிய நிகழ்வு பலரது மனதை தொட்டுள்ளது.

 சிகிச்சை பிரிவின் ஜன்னலில் ஏறிய மகன்:

 ராஸ்மி சுவைதி, 73 வயது பெண் லுகேமியா மற்றும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் ஹெப்ரோன் ஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அம்மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், தோற்று பரவாமல் இருக்க தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.

He Scaled A Hospital Wall To Say Goodbye To His Mother, Who Died Of COVID
He Scaled A Hospital Wall To Say Goodbye To His Mother, Who Died Of COVID

இந்நிலையில், அங்கு ஐந்து நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ராஸ்மிக்கு, அவரது மகனான ஜிஹாத் ஆல் – சுவைதி, அவசர சிகிச்சை பிரிவின் ஜன்னலில் ஏறி பிரியா விடை அளித்தது அதிவேகமாக இணைய தளங்களில் பரவி அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.

அனைவரின் மனதைத் தொட்டப் படம்:

ராஸ்மி தனது மகனின் எதிர்பாராத வருகைக்கு பின், நான்கு நாட்களுக்கு முன்பு, வியாழக் கிழமை மாலை உயிரிழந்துள்ளார். மேலும், 30 வயதுடைய மகன், தனது தாய் அனுமதிக்கப்பட்டுள்ள அறையின் ஜன்னலில் அமர்ந்துள்ளப் படம், இணையத்தில் பரவி ஆயிரக்கணக்கோர் மனதை தொட்டுள்ளது.

ஜிஹாத், அவரது தாய் இறக்கும் நாள் வரை, தினமும் இரவு, அவரது அறை ஜன்னலில் ஏறி அமர்ந்து பார்ப்பார் என்று படத்தைப் பகிர்ந்த சஃஆ குறிப்பிட்டுள்ளார்.

தாயின் கடைசி தருணம்:

தனது தாயின் உடல்நிலை மோசமானவுடன், அவரது அறைக்கு செல்ல முயன்றதாகவும், அவரை மருத்துவமனையினர் அனுமதிக்காததால், அவ்வறையின் ஜன்னலில் ஏறியாக  ஜிஹாத் கூறியுள்ளார். மேலும், அவசர சிகிச்சை பிரிவு ஜன்னலின் வெளியே உதவியற்ற நிலையில் தனது தாயின்  கடைசி நிமிடங்களை பார்த்ததாக பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை.. 26 வயது இளைஞர் உயிரிழந்த பரிதாபம்!!!

இன்றைய சூழ்நிலையில் மன அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரியில் (யூனியன் பிரதேசம்)...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -