மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் மம்முட்டி. இவர் தமிழில் ஆனந்தம், தளபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் காதல் – தி கோர், கடுகன்னாவ ஒரு யாத்ரா, பிரம்ம யுகம் என அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் மம்முட்டிக்கு அடுத்தடுத்து சோகங்களும் நிகழ்ந்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது கடந்த ஏப்ரல் மாதம் அவருடைய தாயார் இறந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தார். தற்போது இந்நிலையில் தற்போது மம்முட்டியின் அக்கா அமீனா காலமாகி இருக்கிறார். ஒரே வருடத்தில் மம்மூட்டி குடும்பத்தில் இரண்டாவது மரணம் ஏற்பட்டு இருப்பது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு வயது 74 இருக்கும் நிலையில் அவரின் இறுதி சடங்கு நாளை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
அடக்கடவுளே.., விஜய் அப்பாவுக்கு என்ன தான் ஆச்சு.., எமோஷனல் பதிவை வெளியிட்ட S.A சந்திரசேகர்!!