
மலையாள திரையில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மம்முட்டி. இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் இவர் நடித்த ‘தளபதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இன்று பேசப்படுகிறது.
இப்படி இருக்கையில் தற்போது இவர் ஜியோ பேபி இயக்கத்தில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து ‘காதல் தி கோர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். காதல் கதையை மையமாக கொண்டு இப்படத்தில் நடித்து பல வருடங்களுக்கு பிறகு ஜோதிகா மலையாள திரைக்குள் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இந்த மாதம் 23 ஆம் தேதி இப்படம் ரிலீசாகும் என படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.