எல்லை மீறும் விவகாரம்…தலைமைச் செயலாளரை அனுப்பமுடியாது…! பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்!!!

0

மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த அலபன் பாண்டியோபாத்யாவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பணியாளர் பயிற்சி மையத்திற்கு பணிமாற்றம் செய்துள்ளதை அடுத்து, இது போன்ற கடினமான சூழலில் எங்கள் மாநில தலைமைச் செயலாரை டெல்லிக்கு அனுப்ப முடியாது என முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை பிரதமர் மோடி, நேரில் மே 28 ஆம் தேதி ஆய்வு செய்தார். அப்போது மேற்கு வங்கத்தில் ஆய்வு நடத்திய மோடி அதன் பிறகு நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கும் விதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் பா.ஜ.க. நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த அலபன் பாண்டியோபாத்யாவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பணியாளர் பயிற்சி மையத்திற்கு உள்துறை அமைச்சகம் பணிமாற்றம் செய்தது.

இதனையடுத்து மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் அலபன் பண்டாபாத்யாயாவை உடனடியாக பணியாளர் பயற்சி துறைக்கு மே 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு  மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எனவே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு தற்போது நிலவி வரும் ஆபத்தான சூழலில் தலைமைச் செயலாளரை அனுப்ப இயலாது. இதனால் உள்துறை அமைச்சகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்து, பணிமாற்ற உத்தரவை ரத்து செய்ய கடிதம் எழுதியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here