‘மாமன்னன்’ திரைப்படத்தின் 2 ஆவது சிங்கிள் ஜிகு ஜிகு…..,நாளை ரிலீஸ்….,

0
'மாமன்னன்' திரைப்படத்தின் 2 ஆவது சிங்கிள் ஜிகு ஜிகு.....,நாளை ரிலீஸ்....,
'மாமன்னன்' திரைப்படத்தின் 2 ஆவது சிங்கிள் ஜிகு ஜிகு.....,நாளை ரிலீஸ்....,

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில், வடிவேலு ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளுக்கு வர இருக்கிறது. இந்த படத்தை, ரெட் ஜெயன்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பாடி இருந்த ‘ராசாக்கண்ணு’ பாடல் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.

மன வருத்தத்தில் ‘அங்காடித் தெரு’ நடிகர்….,சினிமா வாய்ப்பை இழந்து கதறல்….,

தொடர்ந்து, இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜிகு ஜிகு ரயில்’ என்ற பாடல் நாளை காலை 11 மணியளவில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தவிர, ‘மாமன்னன்’ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடைபெற இருப்பதாகவும், அதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here