‘மன்னா மாமான்னா’….,ஏ.ஆர்.ரஹ்மானின் தெறிக்கும் இசை இன்று முதல்….,

0
'மன்னா மாமான்னா'....,ஏ.ஆர்.ரஹ்மானின் தெறிக்கும் இசை இன்று முதல்....,
'மன்னா மாமான்னா'....,ஏ.ஆர்.ரஹ்மானின் தெறிக்கும் இசை இன்று முதல்....,

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. நடிகர் உதயநிதி ஸ்டாலின் சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவித்த பிறகு அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் கடைசி திரைப்படமான ‘மாமன்னன்’ ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.

த்ரில்லர் டிராமா வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அந்த வகையில், ‘மாமன்னன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராசாக்கண்ணு’, ‘ஜிகு ஜிகு ரயில்’ உள்ளிட்ட பாடல்களை இசைப்புயல் ரஹ்மான் கடந்த வாரங்களில் வெளியிட்டு வந்தார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சித்தார்த்…..,சினிமா பயணம் குறித்து நெகிழ்ச்சி….,

இதையடுத்து, ‘மாமன்னன்’ திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில், இயக்குனர் வெற்றி மாறன், பிரதீப் ரங்கநாதன், பா.ரஞ்சித், ஏ.ஆர்.முருகதாஸ், விக்னேஷ் சிவன், போனி கபூர், எச்.வினோத், நடிகர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சூரி, கீர்த்தி சுரேஷ், விஜய் ஆண்டனி, வடிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here