மலேசியா பேட்மிண்டன்: சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இந்திய வீரர்!!

0
மலேசியா பேட்மிண்டன்: சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இந்திய வீரர்!!
மலேசியா பேட்மிண்டன்: சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இந்திய வீரர்!!

மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரில், “மாஸ்டர்ஸ் சூப்பர் 500” என்ற பேட்மிண்டன் தொடர் பல்வேறு நாடுகளில் உள்ள சர்வதேச வீரர்களுக்கு இடையே நடைபெற்றது. கடந்த, மே 23ம் தேதி முதல் தொடங்கப் பட்ட இந்த போட்டியில், இந்தியா சார்பாக பி வி சிந்து, எச்.எஸ் பிரணாய் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் பி வி சிந்து இந்தோனேஷியா வீராங்கனையிடம் அரையிறுதியில் தோல்வியை தழுவி நாடு திரும்பினார். இதே போல, ஆடவருக்கான ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதியில் எச்.எஸ் பிரணாய் இந்தோனேஷியா வீரரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். நேற்று நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், எச்.எஸ் பிரணாய் சீனாவின் வெங் ஹாங்யாங் வீரரை எதிர்கொண்டார்.

ச்சீ.., உனக்கு அசிங்கமா இல்ல.., உன்னால தான் ஏன் புருஷனுக்கு இந்த நிலைமை.., கண்ணனை கேவலப்படுத்திய முல்லை!!!

இதில், முதல் செட்டை (21-19) வென்ற பிரணாய், 2வது செட்டை 13-21 என்ற புள்ளி கணக்கில் இழந்தார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3 வது செட்டில் பிரணாய் 21-18 என்ற புள்ளி கணக்கில் அபாரமாக வென்றார். இதன் மூலம், மலேசியா பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் (தங்கம்) பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அடைந்தார். இதற்கு பெண்கள் ஒற்றையர் பிரிவில் (2013, 2016) பி வி சிந்து, (2017) சாய்னா நேவால் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here