மலேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் முன்னணி வீரர்கள் ஏமாற்றம்…, ட்ரீசா மற்றும் காயத்ரி ஜோடி அபாரம்!!

0
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் முன்னணி வீரர்கள் ஏமாற்றம்..., ட்ரீசா மற்றும் காயத்ரி ஜோடி அபாரம்!!
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் முன்னணி வீரர்கள் ஏமாற்றம்..., ட்ரீசா மற்றும் காயத்ரி ஜோடி அபாரம்!!

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் நாளான இன்று தொடர் சறுக்கலை சந்தித்து வந்த இந்தியா, மகளிருக்கான இரட்டையர் பிரிவில் மட்டும் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.

மலேசிய ஓபன் பேட்மிண்டன்:

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரானது கோலாலம்பூரில் உள்ள ஆக்ஸியாட்டா அரங்கில் இன்று முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியாவின் முன்னணி வீரர்களான கிடாம்பி ஸ்ரீகாந்த், பி வி சிந்து, H S பிரணாய், லக்ஷ்யா சென்,சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி, ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் உள்ளிட்ட பலர் பங்கு பெற்றுள்ளனர்.

IPL போட்டிக்கு தயாராகும் இந்திய வீராங்கனை.., போட்டி குறித்து ஸ்மிருதி மந்தனா பளீச் பேட்டி!!!

இதில், இன்று ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் கென்டா நிஷிமோடோ எதிர்கொண்டார். இந்த போட்டியில், கடுமையாக போராடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் 19-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார். இதே போல, மகளிருக்கான ஒற்றையர் பிரிவில், சாய்னா நேவால் சீனாவின் ஹான் யூவிடம் 12-21, 21-17, 12-21 என 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதே பிரிவில், இந்தியாவின் ஆகார்ஷி காஷ்யப் தைவான் வீராங்கனையிடம் 10-21, 8-21 என்ற செட் கணக்கிலும் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் கேபி கரகா விவிஜி பஞ்சாலா தோல்வியை சந்தித்தனர். இன்று நடைபெற்ற போட்டிகளில் தொடர் தோல்வியை இந்திய வீரர்கள் சந்தித்தனர். ஆனால், மகளிருக்கான இரட்டையர் பிரிவில், ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஹாங்காங்கின் யங் என்டி, யங் பி எல் ஜோடியை 21-19, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தனர். நாளை பி வி சிந்து, ஸ்பானிஷின் கரோலினா மரினை எதிர்கொள்ள இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here