‘மாஸ்டர்’ திரைப்படத்துக்கு இப்படியொரு கிளைமேக்ஸா?… இது நல்லா இருக்கே…,

0
'மாஸ்டர்' திரைப்படத்துக்கு இப்படியொரு கிளைமேக்ஸா?... இது நல்லா இருக்கே...,
'மாஸ்டர்' திரைப்படத்துக்கு இப்படியொரு கிளைமேக்ஸா?... இது நல்லா இருக்கே...,

நடிகர் விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்பட கிளைமேக்ஸ் காட்சி இப்படி தான் இருக்கும் என நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

மாஸ்டர் கிளைமேக்ஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்த திரைப்படத்தில் விஜய், JD என்ற கல்லூரி பேராசியர் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அதே போல, நடிகை மாளவிகா மோகனன், சாரு என்ற ரோலில் நடிகர் விஜய்க்கு ஜோடியாகவும், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருப்பார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த படத்தின் கிளைமேக்ஸ் நடிகர் விஜய், விஜய் சேதுபதியை கொலை செய்வது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்த குற்றத்துக்காக ஜெயிலுக்கு செல்லும் JD மீண்டும் திரும்பி வருவாரா, சாருவை சந்தித்து அவரை திருமணம் செய்து கொள்வாரா என்று ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு, ‘மாஸ்டர்’ திரைப்பட நடிகை மாளவிகா ஸ்வாரசியமான பதில் ஒன்றை அளித்துள்ளார்.

நடிகர் விஜய் வீட்டில் இருந்து இன்னொரு இயக்குனர்…,டைரக்ஷனில் களமிறங்கும் சஞ்சய்…,

அதாவது, சிறையில் இருந்து திரும்பிய JD, சாருவை சந்தித்து அவரிடம் காதலை சொல்லி திருமணம் செய்து கொள்வார்கள். பிறகு இருவரும் சந்தோஷமாக வாழ்வார்கள் என்று பதில் கொடுத்துள்ளார். மாளவிகாவின் பதிலைக் கண்டு ரசிகர்கள் அப்படி என்றால் , ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு இப்படி ஒரு கிளைமேக்ஸ் இருந்ததா என்று உற்சாகமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here