தன் ஆண் நண்பரை அறிமுகம் செய்த மாஸ்டர் பட நாயகி  …! – கமெண்டுகளை சரமாரியாக தெளித்த ரசிகர்கள் !!!

0

மாளவிகா மோகனன் ‘பட்டம் போலே’ என்ற  மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தவர். அதன் பின் தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர்  இன்ஸ்டா பக்கத்தில் தனது ஆண் நபரை அறிமுகம் செய்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த அவரின் ரசிகர்கள் தாறுமாறான  கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் பேட்ட படத்தின் மூலம் நடிகை  மாளவிகா மோகனன்  அறிமுகம் ஆனார். அந்த படத்தில் அவர் நடிகர் சசிகுமார் அவர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலம் ஆனவர். அதை தொடர்ந்து விஜய் அவர்களின் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது தனுஷின் D43 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை  மாளவிகா மோகனன்  தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய ஆண் நண்பர் அபினவ் அறிமுகம் செய்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும் அவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளார். அதோடு சேர்ந்து சில உருக்கமான பதிவுகளையும் பதிவிட்டு உள்ளார்.

அதாவது, தன் வாழ்க்கையை  மாற்றியவர் அபினவ் தான். மேலும்  365 நாட்கள் மற்றும் 24/7 என எப்பொழுதும் என் கூடவே இருப்பவரும் இவர் தான் என பதிவிட்டு உள்ளார். இத்தகைய பதிவும் போட்டோக்களும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகள் மற்றும் விமர்சங்களை கமெண்ட் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here