பாஜக.,வில் இணைந்ததற்கு காரணம் இதுதான் – மக்கள் நீதி மய்யம் முன்னாள் நிர்வாகி விளக்கம்!!

0

மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் நிர்வாகியான அருணாச்சலம் பாஜக.,வில் இணைந்துள்ளார். இது அக்கட்சியினர் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தற்போது அவர் இணைந்ததற்கான காரணத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் டூ பாஜக:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தங்களது பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். இந்த தேர்தலில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களும் போட்டியிடுகிறார். இவர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் ஆவார். இவர் தற்போது தனது தேத்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் கமலஹாசன் அவர்களுக்கு தமிழகத்தில் கட்சியின் சின்னமான டார்ச் லைட் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதேபோல் பிரச்சனைகள் இருக்கும் நிலையில் தற்போது அவரது கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த அருணாச்சலம் திடீரென்று பாஜக கட்சியின் உறுப்பினராக சேர்ந்துள்ளார். இது கட்சியினர் அனைவரையும் அதிரவைத்துள்ளது. தற்போது அவர் அதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

கட்சி மாறியதற்கான காரணம்:

மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அருணாச்சலம் கூறியதாவது, தொலைநோக்கு சிந்தனைகளை கொண்டு மத்திய அரசு இந்த வேளாண் சட்டங்களை பிறப்பித்துள்ளது. மேலும் இது ஒரு விவசாயிக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக அமையும். இதனை ஆதரிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டத்தில் நான் பேசினேன்.

ஜன.1 முதல் வாகனங்கள் அனைத்திற்கும் பாஸ்டேக் கட்டாயம்!!

ஆனால் அவர்கள் விவசாயிகளின் நலன் கருதாமல், திமுக.,வில் இருக்கும் நிலைப்பாடு கட்சியின் நலனை கருதிய படியே பேசினார்கள். இப்படி செயல்பட்டால் இந்த கட்சி எப்படி மய்யம் ஆகும், எனவே மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜக.,வின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here