இலவச இணைய வசதி, இல்லத்தரசிகளுக்கு சம்பளம் – மக்கள் நீதி மய்யத்தின் 7 அம்ச திட்டம்!!

0

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில், ஆட்சிமுறை மற்றும் பொருளாதார புத்தெழுச்சிக்காக 7 அம்சங்களை கொண்ட திட்டம் ஒன்று “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் வகுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள்:

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது பிரச்சாரத்தை துவங்கி பல்வேறு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. இதைப்போல கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில், சீரமைப்போம் தமிழகத்தை எனும் தலைப்பில் குடும்ப தலைவிகளுக்கு ஊதியம், வீடு தோறும் இணைய வசதி உள்ளிட்ட 7 அம்சங்களை கொண்ட தேர்தல் வாக்குறுதி திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதல் மற்றும் முக்கிய அம்சமாக உலகத்தரம் வாய்ந்த அரசு நிர்வாகத்தை தமிழக மக்களும் பெறும் வகையில், இனி கிராம பஞ்சாயத்து அலுவலகம் முதல் முதல்வர் அலுவலகம் வரை அனைத்து நடவடிக்கைகளும் வேகமாக, நேர்மையாக இணையவழியில் மேற்கொள்ளப்படும் எனவும், இதன் மூலம் தாமதங்கள் தடுக்கப்படும்.

பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா உறுதி!!

அரசு சார்ந்த அத்தனை ஆவணங்களையும், அனுமதிகளையும், மக்கள் இனிமேல் தங்கள் கைபேசி மூலமாகவே பெரும் வசதியை எங்கள் இணைய வசதி அரசு செய்து தரும் எனவும் எனவும் இளைஞர்களை இளைஞர்களை, இணையவசதி என்பது அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட்டு, அனைத்து வீடுகளுக்கும் இலவச இணையவசதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இளைஞர்களை வேலை கேட்பவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக மாற்றுவதோடு, பெண்களின் முன்னேற்றத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். குறிப்பாக இல்லத்தரசிகளின் பணிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களுக்கும் ஊதியம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த அறிக்கையில், “விவசாயத்தை மேம்படுத்த, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், மாறி வரும் சூழலுக்கேற்ப, சூழியல் சுகாதார மேம்பாடு எங்கள் அரசின் மிக முக்கிய கொள்கையாக இருக்கும் எனவும் , வறுமைகோடு என்பதை மாற்றி செழுமை கோடு உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மையத்தின் இந்த வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here