‘சென்னையில் முக்கிய மேம்பாலங்கள் இன்று இரவு மூடப்படும்’ – காவல்துறை அறிவிப்பு!!

0

நாளை புத்தாண்டு என்பதால் சென்னையில் மக்கள் இன்று முதல் தங்களது கொண்டத்தை ஆரம்பித்து விட்டனர். மேலும் தற்போது கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையை முன்னிறுத்தி புத்தாண்டு கொண்டாடுவதற்கு சில விதிமுறைகளை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

புத்தாண்டு:

நாளை புதிய வருடப்பிறப்பு பிறக்கப்போகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியாக உள்ளார்கள். காரணம் இந்த ஆண்டில் அந்த அளவிற்கு மக்கள் கஷ்டப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு ஒருவருக்கு கூட சிறப்பாக அமையவில்லை. காரணம் கொரோனா என்னும் கொடிய வைரஸ். அனைவரையும் வீட்டில் அமரவைத்தது. வேலைக்கு செல்ல முடியாமல், மேலும் பலர் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்துள்ளனர். உலக மக்கள் அனைவரும் இந்த 2020ம் ஆண்டை மிகவும் மோசமான ஆண்டாக கருதுகின்றனர். அது மட்டுமல்லாமல் இந்த ஆண்டு எப்போது முடியும் என்று எதிர்பார்து கொண்டிருக்கின்றன. மேலும் புது ஆண்டு வந்தால் அணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும் என்று உலக மக்கள் நம்பி வருகின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது நாளை புது ஆண்டு பிறக்கப்போவதால் மக்கள் இன்றே சென்னையில் தங்களது கொண்டத்தை ஆரம்பித்து விட்டன. மேலும் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கொரோனா பரவல் அதிகமாகாமல் இருக்க சென்னை காவல்துறை சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்ட அறிக்கை என்ன வென்றால், இன்று இரவு 10 மணிக்குள் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்கள் என அனைத்தும் மூடிவிட வேண்டும். மேலும் இரவு 10 மணிக்கு மேல் மெரினா கடற்கரைக்கோ அல்லது பெசன்ட் நகர் கடற்கரைக்கோ மக்கள் யாரும் செல்ல கூடாது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

மேலும் புத்தாண்டின் போது சாலை விபத்துகள் மற்றும் ரேஸிங்கை தடுப்பதற்காக இரவு மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் வண்டி பறிமுதல் செய்யப்பட்டு மேலும் அவர்களின் பெயரில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள முக்கியமான சுமார் 75 மேம்பாலங்கள் அனைத்தும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்படும் எனவும், சென்னையில் சுமார் 480 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள்ளது. மேலும் முக்கிய சாலைகளில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இரவு முழுவதும் போலீஸ் ரோந்து பணிகளில் ஈடு பட்டு வருவார்கள் எனவே மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here