விஜய் டிவி சீரியலில் அதிரடி மாற்றம்.., இனி இவருக்கு பதில் இவர் தான்.., வெளியான பகீர் தகவல்!!

0
விஜய் டிவி சீரியலில் அதிரடி மாற்றம்.., இனி இவருக்கு பதில் இவர் தான்.., வெளியான பகீர் தகவல்!!
விஜய் டிவி சீரியலில் அதிரடி மாற்றம்.., இனி இவருக்கு பதில் இவர் தான்.., வெளியான பகீர் தகவல்!!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலில் முக்கிய கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முத்தழகு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலை பார்ப்பதற்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றனர். அதிலும் பிரைம் டைம் சீரியலான பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்கள் தற்போது விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருப்பதால் டிஆர்பி ரேட்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளது . அதே போன்று தான் நான் பிரைம் டைம் சீரியலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் மதியம் ஒளிபரப்பாகும் முத்தழகு சீரியல் கிராமத்து கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்டதால் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அந்த சீரியலில் முத்தழகு கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷோபனாவுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இப்படி இருக்கையில் இந்த சீரியலில் முத்தழகுக்கு தங்கையாக அஞ்சலி கேரக்டரில் நடிக்கும் வைஷாலி தனிகா சீரியலை விட்டு விலகுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

காமெடி நடிகை தேவதர்ஷினியின் ஒரே மகளா இது? அப்படியே அம்மாவை உரிச்சு வச்சிருக்காங்களே!!

ஏனென்றால் அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தை போல சீரியலிலும் பிஸியாக நடித்து வருவதால் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கு பதில் ரம்யா நடிக்க உள்ளதாக கூறியுள்ளனர். இவர் இதுவரை ஒரு சில தொடர்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ப்ரொபஷனல் மேக்கப் ஆர்டிஸ்ட்டாகவும் திகழ்ந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here