நீங்க ஒரு Gmail பயனரா.. அப்போ இந்த வழிமுறையை உடனே செய்யுங்க – இல்லனா ரூ.1100 அம்பேல்!

0
நீங்க ஒரு Gmail பயனரா.. அப்போ இந்த வழிமுறையை உடனே செய்யுங்க - இல்லனா ரூ.1100 அம்பேல்!

நாம் பயன்படுத்தும் ஜிமெயில் அக்கவுண்ட்டில் உள்ள Free storage நிறைந்து விட்டால், தொடர்ந்து நமக்கு வரும் மெயில்களை பெற ரூ.1100 ஐ செலுத்தி கூடுதல் storage-ஐ வாங்கவேண்டும்.

ஜிமெயில் அக்கவுண்ட்:

உலகத்தில் வாழும் மக்கள் டிஜிட்டல் கால கட்டத்திற்கு தற்போது மாறும் நிலையில் நாம் பயன்படுத்தும் அனைத்தும் டிஜிட்டல் ஆக மாறி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஜிமெயில் அக்கவுண்ட் எல்லா வகையிலும் பயனுள்ளதாக அமைந்து வருகிறது. பொதுவாகவே ஜிமெயில் அக்கவுண்ட்-ல் நமக்கு அதிகமான இமெயில்கள் சேருவது வழக்கம்.

இதை மக்கள் பொருட்படுத்தாமல் தேவையற்ற இமெயில்களை நீக்காமல் இருந்து விடுகின்றனர். இதனால் 15GB அளவிலான கிளவுட் ஸ்டோரேஜ் முழுவதும் Gmail, Drive, Photos என நிரம்பி விடுகிறது. இந்த 15GB முடிந்தால், வருடம் 1100 ரூபாய் செலவழித்து 100 ஜிபி அளவிலான கிளவுட் ஸ்டோரேஜை நாம் பயன்படுத்த நேரிடும். இந்த சூழ்நிலைக்கு வராமல் இருக்க வேண்டும் என்றால் தினம் தினம் தேவையில்லாத மெயில்களை நீக்குவதே ஒரே வழி.

நயனுக்கே இப்போ தான் கல்யாணம் ஆச்சு.. அதுக்குள்ள அவங்கள அடுச்சுக்க ஒரு ஆள் வந்துட்டாங்களே!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்காக நீங்கள் ரொம்ப சிரமப்பட வேண்டாம். ஒரு சில வழிமுறைகளின் மூலம் எளிதாக நாம் தேவையற்ற மெயில்களை நீக்கலாம். இதை செய்ய முதலில் ஜிமெயில்-க்கு சென்று Search பகுதிக்குள் நுழைந்து Filter ஐகானை கிளிக் செய்யவும். அதன் பின்னர் Menu list-இல் from பகுதியில் தேவை இல்லை என நினைக்கும் இமெயில் ஐடி-ஐ டைப் செய்யவும்.

இதனை தொடர்ந்து Delete it என்பதை கிளிக் செய்யவும், மீண்டும் Create filter என்கிற பட்டனை கிளிக் செய்தால் அந்த மெயில் ஐடி-யில் இருந்து வரும் மெயில்கள் Automatic delete ஆகிவிடும். இதை நாம் செய்வதன் மூலம் 15GB அளவிலான கிளவுட் ஸ்டோரேஜ் காலி ஆவதை குறைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here