வேலையில்லா VIP களே ரெடி ஆகுங்க.,20,000 நபர்களை பணியமர்த்த முடிவு! டெக் மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு!!

0
வேலையில்லா VIP களே ரெடி ஆகுங்க.,20,000 நபர்களை பணியமர்த்த முடிவு! டெக் மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு!!
வேலையில்லா VIP களே ரெடி ஆகுங்க.,20,000 நபர்களை பணியமர்த்த முடிவு! டெக் மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு!!

முன்னணி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா, அடுத்த ஐந்து ஆண்டுக்குள் 20,000 புதிய ஊழியர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.

அதிரடி அறிவிப்பு:

உலகெங்கும் உள்ள பல முன்னணி ஐடி நிறுவனங்கள், புதிய ஊழியர்களை பணியமர்த்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மூன் லைட்டிங் எனப்படும், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனத்தில் தங்கள் ஊழியர்கள் வேலை பார்ப்பதை ஒரு சில நிறுவனங்கள் அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில் உலகின் முன்னணி நிறுவனமான டெக் மஹிந்திரா, புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதாவது, கடந்த செப்டம்பர் காலாண்டில் புதிதாக 5,887 ஊழியர்களை இந்த நிறுவனம் பணியமர்த்தியது. தற்போது வரை இந்த நிறுவனத்தில் 1,63,912 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இதை இலக்காகக் கொண்டு இன்னும் 5 ஆண்டுகளுக்குள் புதிதாக 20,000 நபர்களை வேலைக்கு சேர்க்க முடிவு செய்துள்ளதாக மஹிந்திரா டெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிபி குர்னானி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை .,, மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிக்கை!!

இதுபோக குஜராத் மாநில அரசுடன் இணைந்து இந்த நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில், 3000 ஊழியர்களை பணியமர்த்த ஒப்பந்தம் செய்துள்ளது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் பல வேலையில்லா இளைஞர்கள், வேலைவாய்ப்பு பெறுவதற்கான சாத்தியம் உருவாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here