சாட்டை பட மகிமாவா இது???வெள்ளை கலர் தாவணில ஏஞ்சல் மாதிரி இருக்கீங்க…!வெளியான லேட்டஸ்ட் வீடியோ!!!

0

தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்தவர் நடிகை மகிமா  நம்பியார். அவ்வப்போது தனது அழகு கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஜெயம் ரவியின் பட பாடலுக்கு ரீல்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவரின் ரசிகர்கள் ஏஞ்சல் மாதிரி ஜொலிக்கும் அவரின் அழகை பார்த்து ரசித்து வருகின்றனர்.

தன்னுடைய 15 வயதிலேயே திரைக்கு வந்தவர் நடிகை மகிமா நம்பியார். அதாவது காரியஸ்தன் என்ற மலையாள மொழி படத்தின் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனவர். அதன் பின் தமிழில்  சமுத்திரகனியின் படமான சாட்டை படத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பள்ளி படிக்கும் மாணவியாக நடித்திருப்பார். மேலும் அந்த படத்தில் ரொமான்ஸ், சோகம் என தன்னுடைய நடிப்பு திறமை முழுவதையும் காட்டி இருப்பார்.

அதை தொடர்ந்து தமிழில் குற்றம் 23, கொடிவீரன் உட்பட  பல படங்களில் நடித்துள்ளார். தமிழை தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்கள் அவரின் கைவசம் வைத்து உள்ளார்.

தற்போது, 2008 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் உள்ள ‘எப்படி இருந்த எம் மனசு…’ என தொடங்கும் விவேகா வரிகளில் அமைந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவில் அவர் அழகிய வெள்ளை நிற தாவணியில் ஒரு தேவதை போல தோன்றுகிறது. இதை பார்த்த  ரசிகர்கள் அவரின் அழகை சொல்ல வார்த்தைகள் இல்லாமல் திகைத்து போய் உள்ளனர். மேலும் இந்த விடீயோவை வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mahima Nambiar (@mahima_nambiar)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here