மகாத்மா காந்தி கொள்ளு பேத்திக்கு 7 வருடம் சிறை… நீதிமன்றம் உத்தரவு!!! இதான் காரணமாம்!!!

0

தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகர நீதிமன்றம், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி ஆஷிஷ் லதா ராம்கோபின் பண மோசடி செய்த வழக்கில் அவருக்கு 7 வருடம் சிறை தண்டனை விதித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தியின் பேத்தி எலா காந்தி. இவரது மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின். 2015ம் ஆண்டில் இவருக்கு எதிரான மோசடி வழக்கு ஒன்று டர்பன் நீதிமன்றத்தில் பதிவானது. தேசிய வழக்குரைஞர் ஆணையத்தின் பிரிகேடியர் ஹங்வானி முலாட்ஸி எதிர் தரப்பில் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கிற்கு இறுதி தீர்ப்பு நேற்று வெளியாகியுள்ளது.

இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு தனக்கு சரக்குகள் வந்துள்ளதாகவும், ஆனால், இறக்குமதி செலவுகள் மற்றும் சுங்கக் கட்டணத்தை செலுத்துவதற்கு தனக்கு பணம் இல்லை என்றும்,  New Africa Alliance Footwear Distributors என்ற நிறுவனத்திடம் இருந்து ஆஷிஷ் லதா ராம்கோபின் பணம் வாங்கியுள்ளார். லதா ராம்கோபின் மீதான நன்மதிப்பு காரணமாகவும், தொழிலதிபர் மகாராஜ், அவருக்கு 6.2 மில்லியன் ராண்டை கடனாக அளித்திருக்கிறார்.

பின்னர் ஆஷிஷ் லதா ராம்கோபின் தன்னிடம் காட்டிய அனைத்து ஆவணங்களும் போலியானது என்பதும், அவர் மோசடி செய்திருக்கிறார் என்பதையும் அறிந்த தொழில் அதிபர் மகாராஷ், லதா மீது புகார் அளித்து வழக்கு தொடுத்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here