மகாராஷ்டிராவில் தொடங்கிய மூன்றாம் அலை – அமைச்சரின் பேச்சால் மக்கள் பீதி!!

0

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை தொடங்கி விட்டதாக மாநிலத்தின் எரிசக்தி அமைச்சர் நிதின் ராவத் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் அலை:

நாட்டில் கடந்த 2019 ஆண்டின் இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸின் முதல் இரண்டு அலைகளால் பல லட்சம் மக்களின் உயிரை பலி வாங்கியுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்துவதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.  இதில் மேலும், உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸின் தாக்கம் இன்னும் முழுமையாக குறையாத நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட் 19 வைரஸின் மூன்றாம் அலை ஆரம்பித்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள அம்மாநிலத்தின் எரிசக்தி துறை அமைச்சர் நிதின் ராவத் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் பதிவாக ஆரம்பித்து உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின், இந்த அதிகரிப்பால் மாநிலத்தில் மூன்றாவது அலை ஆரம்பித்து இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால், விரைவில் மாநிலத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது அல்லது தொற்று அதிகம் உள்ள பகுதியில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவது குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அறிவித்தார்.  அமைச்சரின் இந்த அறிவிப்பால், மக்கள் மிகுந்த பயத்துடன் இருந்து வருகிறார்கள்.  இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தற்போது முடுக்கிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here