ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு..!

0

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. மேலும் கட்டுபாடுகள் மற்றும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிகமாக பரவி வருகிறது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நாடு தழுவிய ஊரடங்கு ஆறாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து யோகா, உடற்பயிற்சி மையங்கள் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கியுள்ளனர். மேலும் திரையரங்குகளுக்கு தடை தொடர்கிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – ‘அன்லாக் 3.0’ தளர்வு விதிமுறைகள் இதோ!!

இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அத்துடன் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம், சுப நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேலும், இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேலும் பங்கேற்கக்கூடாது. தனிநபர் இடைவெளிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here