நாட்டிலேயே முதல் மாநிலம் – சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு தடை!!

0

சிகரெட்டுகள் மற்றும் பீடி சில்லறை விற்பனையை மகாராஷ்டிரா அரசு தடை செய்துள்ளது. இந்தியாவிலேயே இத்திட்டத்தை கொண்டு வந்த முதல் மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. சிகரெட் பேக்கேஜிங் மீது அது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த கிராஃபிக், பொது சுகாதார எச்சரிக்கைகளை வாடிக்கையாளர்கள் பார்ப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிகரெட், பீடி விற்பனை தடை:

செப்டம்பர் 24 ம் தேதி மஹாராஷ்டிரா மாநில பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “சிகரெட் மற்றும் பீடிகளின் சில்லறை விற்பனைக்கு அரசு முழு தடை விதித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களின் 7 வது சட்டப் பிரிவின் கீழ் முதன்மை செயலாளர் டாக்டர் பிரதீப் வியாஸ் இந்த உத்தரவினை பிறப்பித்து உள்ளார். சிகரெட், பீடி புடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். மேலும் நாட்டிலேயே கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Cigarattes
Cigarattes

ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகள் முடிவில் புகையிலை பொருட்கள் மீது 10 சதவிகித வரி உயர்வால் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையில் 8 சதவிகிதம் குறைகிறது என்று தெரிவிக்கின்றன. ஆனால் ஒரு சிகரெட் சில்லறை வர்த்தகத்தில் வாங்க மக்கள் அனுமதிக்கப்பட்டால், அதிக வரிகளின் விளைவை அவர்கள் உணர முடியவில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனாலேயே மாநில அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

உலகளவில் இளைஞர்கள் புகைபிடிப்பது குறித்த கணக்கெடுப்பு 2016ன் படி மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகக் குறைந்த புகைபிடித்தல் விகிதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here