தீவிரப்படுத்தப்படும் ஊரடங்கு.. மாற்றம் செய்யப்பட்ட தளர்வுகள் – மகாராஷ்டிரா மாநில அரசு அறிவிப்பு!!!

0

மகாராஷ்டிராவில் உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அம்மாநில அரசு ஊரடங்கை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் எங்கு கொரோனா மூன்றாவது அலை வந்து விடுமோ என்று மக்கள் அஞ்சி வரும் வேளையில், சில நாட்களாக குறைந்த தொற்று பாதிப்பு மகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் தற்போது அதிகரித்து வரும் தொற்று பாதிப்பிற்கு முக்கிய காரணமாக டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் உள்ளது.

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளாவில் ஏற்கனவே டெல்டா பிளஸ் வகை தொற்று பாதிப்பு அதிகமாக வர தொடங்கி உள்ளன. கடந்த சில நாட்களாக 10,000 க்கும் குறைவாக உள்ள தொற்று எண்ணிக்கை மீண்டும் மகாராஷ்டிராவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே அம்மாநில மாவட்ட ஆட்சியர்களுடன் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.

தற்போது ஊரடங்கு தளர்வுகள் குறித்த சில முக்கிய அறிவிப்புகளை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. அந்த அரசு ஊரடங்கில் தளர்வுகளை 5 கட்டமாக அறிவிக்க ஏற்கனவே முடிவு செய்திருந்ததது. இந்நிலையில் அதில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அம்மாநில அரசு நீக்கியுள்ளது.

அதன்படி மூன்றாம் கட்ட தளர்வுகளில் அத்திவாசிய பொருட்களை விற்கும் கடைகள் அனைத்து நாடகளிலும் மாலை 4 மணி வரையும், அத்திவாசியமற்ற பொருட்களை விற்கும் கடைகள் வார நாட்களில் மாலை 4 மணி வரையும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here