தமிழக பாணியில் அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மகாராஷ்டிரா.. இனி அவங்க குடும்பத்துக்கே கவலை இல்ல!!

0

மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் யாரேனும் உயிர் இறந்தால் கருணை அடிப்படையில் தகுதியான அவர்களின் ரத்த உறவு யாரேனும் அரசு பணியில் சேர்க்கப்படுவார்கள் என்று மகாராஷ்டிரா   அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடும்பத்தில் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிர் இழப்பு ஏற்பட்டால் அவர்களின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். அதுவும் பொருளாதார ரீதியாக அந்த நபரை மட்டும் சார்ந்திருக்கும் குடும்பம் மனதளவிலும் பொருளாதாரத்திலும் கடுமையான இழப்பை சந்திக்கும். அந்த குடும்பத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மிக கடினம்.

இதனால் மராட்டிய அரசு, அரசு ஊழியர்களுக்கு ஒரு சலுகையை வழங்கி உள்ளது. அதாவது மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது அம்மாநிலத்தில் அரசு ஊழியர் யாரேனும் உயிர் இழந்தால் கருணை அடிப்படையில் தகுதியான அவர்களின் ரத்த உறவு யாரேனும் அரசு பணியில் சேர்க்கப்படுவார்கள் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

1972 ஆம் ஆண்டிலேயே இத்திட்டத்தை தமிழ் நாட்டில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி நடைமுறைப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here