18,600 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று..! ஊரடங்கை ஜூன் 15 வரை நீடித்தது மாநில அரசு!!!

0

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நாளையுடன் அம்மாநிலத்தில் ஊரடங்கு முடிவுக்கு  வரும் நிலையில், மேலும் 15 நாட்களுக்கு அதாவது, ஜூன் 15 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் 57,31,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 53,62,370 ஆக உள்ளது. 2,71,801 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை அம்மாநிலத்தில் 98,844 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடு மேலும் 15 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா ஊரடங்கில் நோய்த்தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிப்பதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவல் விகிதம் 20 சதவிகிதத்திற்கு மேல் உள்ள மாவட்டங்களுக்கு உள்ளே செல்லவோ, வெளியே வரவோ யாருக்கும் அனுமதியில்லை என உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டங்களில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து கட்டுப்பாடு விதிப்பது, விலக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here