
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் சூழ்நிலை காரணமாக காவேரி, விஜயை வீட்டாருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் விஜயின் வீட்டார் இவர்களுக்கு திருமண வரவேற்பு விழா வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் இதன் ப்ரொமோ நியூ வெளியாகியுள்ளது. அதில் காவிரி – விஜய்க்கு நடக்க இருக்கும் வரவேற்பு விழாவுக்கு விஜய்யின் சித்தப்பாவுடன் பசுபதி என்ட்ரி கொடுக்கிறார்.
Enewz Tamil WhatsApp Channel
இதை பார்த்த காவேரியின் குடும்பத்தார் & நிவின் அதிர்ச்சி அடைகின்றனர். இதன் பின் மேடைக்கு வந்த பசுபதி இந்த திருமண ஜோடிக்கு நான் கொடுக்கும் கல்யாணப்பரிசு என ஒரு ரிமோட்டை அவர்கள் கையில் கொடுக்கிறார். பின்னர் அந்த ரிமோட்டை ஆன் செய்ய சொல்லி விஜய்யிடம் வற்புறுத்துகிறார். அதன் பின் ரிமோட்டை விஜய் ஆன் செய்தவுடன் அங்குள்ள டிவியில் குறும்படம் ஒளிபரப்பாகிறது.
அதாவது காவேரி மற்றும் நிவின் காதலித்த போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதில் ஒளிபரப்பட்டுள்ளது. அதைப் பார்த்த காவேரி & விஜய் குடும்பத்தினர் மற்றும் திருமணத்திற்கு வந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். மேலும் இந்த அசிங்கத்தை தாங்க முடியாமல் காவிரி கண் கலங்கி நிற்கிறார். மேலும் இனி விஜய் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பார்க்க மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.