‘விஜய் டிவியில் மீண்டும் அகிலம் போற்றும் பாரதம்’ – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

கொரோனா காரணமாக ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் சீரியல்கள் அனைத்து மறுஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் விஜய் டிவி ஸ்பெஷலான மஹாபாரதம் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது. இதனை கேட்ட பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

விஜய் டிவி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் எப்பொழுதுமே ஸ்பெஷல் தான். அதிலும் சீரியல்கள், காமெடி நிகழ்ச்சிகளை பற்றி செல்லவே வேண்டாம். டாப் ஹிட் தான். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வந்த மஹாபாரதம் தான் மக்கள் மத்தியில் அதிக புகழ் பெற்றது.

எத்தனை தடவை அந்த மஹாபாரதத்தை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. மேலும் அத்தனை தடவை விஜய் டிவியிலும் ஒளிபரப்பாகி விட்டது. இது பழங்கால கதை என்பதாலேயே அனைவருக்கும் பிடித்து போனது.

அதில் நடிக்கும் பாண்டவர்கள், கிருஷ்ணன் மற்றும் கர்ணன் என அனைவரும் மக்களின் மோஸ்ட் பேவோரைட். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் மீண்டும் மஹாபாரதம் ஒளிபரப்பாக உள்ளது.

வரும் திங்கள் கிழமையில் இருந்து காலை 10 மணி முதல் 12.30 வரை 1.30 மணி நேரமாக ஒளிப்பரப்பாக உள்ளது. இதனை கேட்ட பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். லாக்டவுன் காரணத்தால் அனைத்து சீரியல்களை நிறுத்தப்பட்ட நிலையில் இல்லத்தரசிகளுக்கு இது ஒரு பெரும் அருமருந்தாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here