அடுத்த 3 நாட்களுக்கு மதுரை வழியாக செல்லும் 10 ரயில்களின் இயக்கம் மாற்றம்., முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

0
அடுத்த 3 நாட்களுக்கு மதுரை வழியாக செல்லும் 10 ரயில்களின் இயக்கம் மாற்றம்., முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
அடுத்த 3 நாட்களுக்கு மதுரை வழியாக செல்லும் 10 ரயில்களின் இயக்கம் மாற்றம்., முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

நாட்டின் பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் பயணமாக ரயில் பயணம் உள்ளது. இதனால் ரயில் சேவைகள் விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மதுரை மற்றும் விருதுநகர் ரயில் வழித்தடங்களில் இரட்டை ரயில்வே பாதை மற்றும் தண்டவாளங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இவ்வழியே செல்லும் ரெயில்களின் போக்குவரத்து இன்று (பிப்ரவரி 6) முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை 3 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது,

  • பாலக்காடு to திருச்செந்தூர், விழுப்புரம் to மதுரை, மதுரை to கோவை, சென்னை சென்ட்ரல் to மதுரை எக்ஸ்பிரஸ் ஆகிய 4 ரயில்களும் இறுமார்க்கமாக திண்டுக்கல் வரை மட்டுமே செல்லும்.
  • குருவாயூர் to சென்னை எழும்பூர், நாகர்கோவில் to மும்பை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி to ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் 3 நாட்களுக்கு மானாமதுரை வழியாக இயங்கும்,
  • நாகர்கோவில் to கோவை, மதுரை to செங்கோட்டை பாசஞ்சர் ஆகிய 2 ரயில்களும் இறுமார்க்கமாக விருதுநகர் வரை மட்டுமே செல்லும்.
  • திருவனந்தபுரம் to மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் இறுமார்க்கமாக கூடல்நகர் வரை மட்டும் இயங்கும்,
  • புனலூர் to மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் நாளை ஒருநாள் மட்டும் இறுமார்க்கமாக நெல்லை வரை இயங்கும்,
  • மேலும் திருச்செந்தூர் to பாலக்காடு மற்றும் மதுரை to ராமேஸ்வரம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.

மேற்குறிப்பிட்ட போக்குவரத்து மாற்றங்களை மதுரை கோட்ட ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here