மண்மணக்கும் ‘மதுரை மட்டன் குழம்பு’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
mutton-curry-thumb
mutton-curry-thumb

பொதுவாக மதுரை என்றாலே சுவையான உணவிற்கு பஞ்சமில்லாத மாவட்டம் என்றே சொல்லலாம். மேலும் மதுரையை தூங்க நகரம் என்றும் கூறுவதுண்டு. ஏனெனில் இரவில் எந்த நேரத்தில் சென்றாலும் உணவிற்கு பஞ்சமிருக்காது. இப்பொழுது மண் மணக்கும் மதுரை ஸ்டைலில் மட்டன் குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

Spicy-Mutton-Curry-Ingredients-300x175
Spicy-Mutton-Curry-Ingredients

மட்டன் – 1/4 கி

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 1

இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மல்லித்தூள் – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி

பட்டை, கிராம்பு

பிரியாணி இலை

செய்முறை

முதலில் தேங்காய், சோம்பு, சீரகம் மற்றும் மிளகு போன்றவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவும். இப்பொழுது குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு மற்றும் பிரியாணி இலை போன்றவற்றை சேர்த்து நன்கு தாளித்து கொள்ளவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுதை அதில் சேர்க்கவும்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

Mutton-Curry
Mutton-Curry

பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சைவாடை போகும்வரை வதக்கவும். இப்பொழுது மட்டனை அதில் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அதில் அரைத்து வைத்த தேங்காய் கலவையை சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும், இப்பொழுது 4 விசில் வந்ததும் இறக்கினால் சுவையான மட்டன் குழம்பு தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here