தீ பற்றி எரியும் மதுரை சரவணா ஸ்டோர்ஸ்.,1 மணி நேரமாக அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்!!

0
தீ பற்றி எரியும் மதுரை சரவணா ஸ்டோர்ஸ்.,1 மணி நேரமாக அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்!!
தீ பற்றி எரியும் மதுரை சரவணா ஸ்டோர்ஸ்.,1 மணி நேரமாக அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்!!

மதுரை மாட்டுத்தாவணியில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையின், 9வது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து:

தமிழகம் முழுவதும், பல கிளைகளுடன் இயங்கி வரும் முன்னணி விற்பனை நிறுவனங்களில் ஒன்று சரவணா ஸ்டோர்ஸ். இந்த கடையில் பெரும்பாலும் மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும். அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில், கிட்டத்தட்ட 5 ஏக்கர் பரப்பளவில், 10 மாடிகளுடன் கூடிய பிரமாண்ட சரவணா ஸ்டோர்ஸ் கடை அமைக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஒவ்வொரு தளத்திலும் மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும், இங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இக்கடையின் 9வது தளத்தில் உணவகம் இயங்கி வருகிறது. தற்போது, இந்த உணவகம் அமைந்துள்ள 9வது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

 

ஆதரவின்றி அசிங்க பேச்சுக்கு ஆளான சகோதரிகள்.., துணை நிற்கும் குமரன்.., மகாநதி ப்ரோமோ ரிலீஸ்!!

இதனால் கடையில் இருந்த, ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புகழ்பெற்ற கடையில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here