பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டி புகார் – முன்ஜாமீன் மனுதாக்கல்!!

0
mohan
mohan

கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது மகளின் படிப்பு செலவிற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தவர் மதுரையைச் சேர்ந்த சலூன்கடை உரிமையாளர் மோகன். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ‘மான் கி பாத்’ உரையில் இவரை பாராட்டி பேசியிருந்தார். அதனையடுத்து மோகன் தனது மனைவியுடன் பாஜக கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அவர்மீது கந்துவட்டி புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

mohan
mohan

மதுரை அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில் கங்கைராஜன் என்பவர் கடந்த 13ம் தேதி கொடுத்த புகாரின் பேரில் மோகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மனுவில், மருத்துவச் செலவிற்காக பாஜக.,வைச் சேர்ந்த மோகனிடம் 30,000 ரூபாய் கடன் வாங்கி இருந்தேன். பின்னர் வட்டியுடன் சேர்த்து 70,000 ரூபாய் செலுத்தி விட்டேன். மேலும் பணம் கேட்டு என்னை மிரட்டி தகாத வார்த்தைகளால் மோகன் திட்டுகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் மோகன் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?? மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை!!

இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு மோகன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். இன்று விசாரணைக்கு வரும் வழக்கில் முன்ஜாமீன் வழங்கப்படா விட்டால் மோகன் கைது செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here