2ஆம் திருமணம் செய்து கொண்ட மதுரை முத்து., மறைந்த மனைவிக்காக செய்ததை நீங்களே பாருங்க!!

0
2ஆம் திருமணம் செய்து கொண்ட மதுரை முத்து., மறைந்த மனைவிக்காக செய்ததை நீங்களே பாருங்க!!

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர்தான் மதுரை முத்து. இதைத்தொடர்ந்து அசத்தப்போவது யாரு, ஞாயிறு கலாட்டா, குக்வித் கோமாளி உள்ளிட்ட  பல ரியாலிட்டி ஷோகளில் பங்கேற்று ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இது போக திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் படு பிஸியாக இருந்து வரும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்ட போஸ்ட் வைரலாகி வருகிறது.

 அதாவது லேகா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மேலும் 2016 ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் இவரது மனைவி உயிரிழந்தார். இதையடுத்து தன்னுடைய மனைவியின் தோழியான நீத்து என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இவரை பலரும் பலவிதமாக விமர்சித்து வந்தனர்.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் மதுரை முத்து தனது முதல் மனைவியின் இறந்த தினத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் “நினைவோடு”என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த உருக்கமான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here