பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த காமெடி நடிகரா?? அப்போ கண்டிப்பா சிறப்பான சம்பவம் இருக்கு!!

0
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த காமெடி நடிகரா?? அப்போ கண்டிப்பா சிறப்பான சம்பவம் இருக்கு!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த காமெடி நடிகரா?? அப்போ கண்டிப்பா சிறப்பான சம்பவம் இருக்கு!!

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து பங்கேற்க உள்ளதாக தகவல் கசிந்து உள்ளது.

பிக்பாஸ் சீசன் 6:

விஜய் டிவியில் சீரியல்களை தொடர்ந்து, ரியாலிட்டி ஷோக்களுக்கு தான் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் “பிக் பாஸ் சீசன் 6” விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமோக்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த 2017 ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம், உலக நாயகன் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் புதிய முயற்சியாக, இனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாதாரண மக்களும் பங்கேற்கலாம் என்று கூறி விஜய் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோவில் பிக்பாஸ் சீசன் 5 இன் டைட்டில் வின்னர் ராஜூ ஜெயமோகன், “நீங்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்” என்று சொல்லி இருப்பார். மேலும் இந்த சீசனில் யார் யார் கலந்து கொள்ள போகிறார் என்பது குறித்தும் பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெந்து தணிந்தது காடு படத்தின் ரகசியத்தை போட்டு உடைத்த சிம்பு.., அப்போ இன்னொரு சம்பவம் இருக்கு!!

மேலும் மேடை, தொலைக்காட்சிகளில் நகைச்சுவை பேச்சாளராக வலம் வரும், “மதுரை முத்து” பிக் பாஸ் சீசன் 6 ல் கலந்து கொள்ள போவதாக செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இவர் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, காமெடி ஜங்ஷன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர். மேலும் இவர் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் மதுரை முத்து பிக்பாஸ் சீசன் 6 ல் பங்கேற்க உள்ளாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here