
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பங்குனி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் கோடை வசந்த உற்சவ விழா மார்ச் 27 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவ்விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் ராஜ அலங்காரத்துடன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெள்ளியம்பல மண்டபத்தின் ஊஞ்சல் உற்சவத்தில் காட்சியளிப்பார்கள். இதில் உச்ச பட்சமாக கருதப்படும் சாமி புறப்பாடு நிகழ்ச்சி பங்குனி உத்திரத்தன்று (ஏப்ரல் 5) நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு செல்லூரில் உள்ள திருவாப்புடையார் திருக்கோவிலில் எழுந்தருள்வார்கள்.
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.., இதற்கு மொத்தமாக தடை.., தேர்வுத்துறை அதிரடி உத்தரவு!!!
இந்த கண்கொள்ளா காட்சியை காண பல்லாயிரக்கணக்கானோர் வைகை வடகரைக்கு திரண்டு வருவார்கள். மேலும் இந்த திருவிழா நாட்களில் பக்தர்களின் வேண்டுதல்களான தங்கரத உலா, உபய திருக்கல்யாணம், உபய வைரக்கிரீடம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறாது என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.