சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வழக்கின் உத்தரவை ஒத்திவைத்தனர்.
சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரம்..!
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது 5 காவலர்களை கைது செய்தது எப்படி என்று சிபிசிஐடி போலீசார் விளக்கம் அளித்தனர்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கேஸ் டைரி குறித்த முக்கியமான தகவல்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கைது செய்த ஆய்வாளர் உள்ளிட்டோரை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்த அனுமதி அளித்தனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
நீதிபதிகள் பாராட்டு..!
சிபிசிஐடி 5 காவலர்களை கைது செய்ததற்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் சாத்தான்குளம் சம்பவம் போல் இனிமேல் தமிழகத்தில் எங்கும் நடக்கக்கூடாது. சமுதாய வாழ்க்கை முன்னேறிய நிலையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடிப்பது இயல்புக்கு மாறானது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சாத்தான்குளம் சம்பவத்தில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியிடம் நீதிபதிகள் தொலைபேசி மூலம் பேசியபோது அப்போது தைரியமாக சாட்சியம் அளித்த காவலர் ரேவதிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் பெண் காவலரின் பாதுகாப்பு மிக முக்கியம் என தெரிவித்தனர்.