இந்தியாவின் மருத்துவ அவசர நிலை குறித்து எங்களால் முடிவு எடுக்க முடியாது – மதுரை கிளை அதிர்ச்சி!!

0
Madurai high court
Madurai high court

இந்தியாவில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மதுரை கிளைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை கிளை:

இந்தியாவில் வேகமெடுத்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அலைமோதி வருகின்றனர். தற்போதைய நிலையில் நாட்டில் நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிசனுக்கு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தினசரி பலர் ஆக்சிஜன் இன்றி மரணமடைந்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் ஆக்சிஜன் நிறுவனங்கள் பல தனியார் வசம் இருப்பதால் அதன் விலை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ஏழை மக்களால் அதனை வாங்க சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே நாட்டில் உள்ள அனைத்து மருந்து மற்றும் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களையும் மத்திய அரசு கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து சரிவை காணும் பங்குச்சந்தை – புலம்பும் வர்த்தகர்கள்!!

இந்த வழக்கு இன்று நீதிபதி சஞ்சீப் மற்றும் செந்தில்குமார் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இந்தியாவில் மருத்துவ அவசர நிலை குறித்த முடிவுகளை எடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் கொரோனா தொற்றினை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று கூறியும் வழக்கை முடித்துவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here