கொரோனாவிற்கு சித்த மருத்துவரின் ‘இம்பரோ பொடி’ – சோதித்துப் பார்க்க நீதிமன்றம் உத்தரவு!!

0

கொரோனாவுக்கு எதிராக தமிழக சித்த மருத்துவர் தயாரித்துள்ள 66 மூலிகைகள் கொண்ட இம்ப்ரோ சித்த மருத்துவ பொடியை மத்திய அரசு பரிசோதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சித்த மருத்துவரின் இம்ப்ரோ மருந்து..!

மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன் கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் உள்ளடங்கிய இம்ப்ரோ என்ற பொடியைத் தயாரித்திருந்தார். இந்தப் பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மருத்துவ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து, தினமும் இருவேளை சாப்பிடுவதற்கு முன்பு குடித்தால் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடலாம். இந்த மருந்தால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தக்கூடிய சித்த மருந்தான இம்ப்ரோவை, நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

கொரோனா தாக்கத்திற்கான புதிய அறிகுறிகள் – மத்திய நோய்கட்டுப்பாடு மையம் அறிவிப்பு!!

இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்ய உத்தரவு..!

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் கண்டுபிடித்துள்ள இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்வதற்காக சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, அலோபதி மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள புதிய சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இம்ப்ரோ மருந்தில் கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா என்று ஆய்வு செய்து ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here