லவ் வீக வாழ்க்கையை நோக்கி ஓடிய மகள்.., கல்யாண வீடு சாவு வீடாக மாறிய சம்பவம்.., எங்கே.., என்ன நடந்தது?

0
லவ் வீக வாழ்க்கையை நோக்கி ஓடிய மகள்.., கல்யாண வீடு சாவு வீடாக மாறிய சம்பவம்.., எங்கே.., என்ன நடந்தது?

தற்போதைய காலகட்டத்தில் காதலால் காதலர்கள் தற்கொலை செய்த காலம் போய், காதலால் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் அருகே அயன் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் தனது மனைவி வான்மதி மற்றும் மகன், மகளுடன் வாழ்ந்து வந்தார். இதனை தொடர்ந்து தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட செல்வம் தனது சொந்த காரர் ஒருவரை நிச்சயம் பேசி முடித்துள்ளார். 

ஆனால் மகளோ வேறொரு பையனை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த செல்வம் மகளை கண்டித்துள்ளார். இதனால் கடுப்பான மகள் தனது காதலனுடன் ஓடி சென்று கல்யாணம் செய்து கொண்டார். அதை தாங்கிக் கொள்ளாமல் மன அழுத்தத்துடன் கொஞ்சம் நாட்கள் இருந்து வந்த செல்வம் மனைவியுடன் சேர்ந்து விஷம் குடித்து உயிரை மாய்த்து கொண்டனர். இதை தொடர்ந்து காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here