மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி?? மதுரை உயர்நீதிமன்ற கிளை!!

0

தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மதுரை கிளை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சித்திரை திருவிழா:

தமிழகத்தில் ஆண்டு தோறும் மிக சிறப்பாக நடந்து வரும் திருவிழா தான் சித்திரை திருவிழா. ஆண்டு தோறும் இந்த திருவிழாவை காண்பதற்கு கோடிக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவர். பக்தர்கள் கூட்டத்தின் அலைமோதலில் இந்த திருவிழா மிக சிறப்பாக நடந்து வரும். இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா பரவல் மிக அதிகமாக கண்டறியப்பட்டு வந்தது. இதன் காரணமாக மதுரையில் கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கு பக்தர்களின் அனுமதிக்கு தடை விதித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதேபோல் சில முக்கிய நிகழ்வுகள் மட்டும் கோவில் வளாகத்திற்குள் பகதர்கள் இன்றி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது மிக தீவிரமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மதுரை பகுதியில் மிக அதிகளவிலான கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் இந்த வருடமும் சித்திரை திருவிழாவிற்கு பக்தர்களின் அனுமதிக்கு தடை விதித்தனர்.

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – மக்கள் அதிர்ச்சி!!

கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கோவில் வளாகத்திற்குள் முக்கிய நிகல்வுகள் நடைபெறும் என்று தெரிவித்தனர். இதனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் இதுகுறித்து மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இதனை விசாரித்த நீதிமன்றம் மக்களின் நலன் கருதி திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கோவில் நிர்வாகத்தின் உத்தரவை மீற முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here