மதுரை விமான நிலைய பார்க்கிங்கில் நடக்கும் கொள்ளை.., பயணிகளிடம் கல்லா கட்டும் நிர்வாகம்!

0
மதுரை விமான நிலைய பார்க்கிங்கில் நடக்கும் கொள்ளை.., பயணிகளிடம் கல்லா கட்டும் நிர்வாகம்!
மதுரை விமான நிலைய பார்க்கிங்கில் நடக்கும் கொள்ளை.., பயணிகளிடம் கல்லா கட்டும் நிர்வாகம்!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்துகளில் ஒன்று விமான சேவை. குறிப்பிட்ட கால நேரத்திற்குள், உடனடியாக செல்ல விரும்பும் பயணிகள் இந்த சேவையை தேர்வு செய்கின்றனர். இந்த விமான சேவை, சாமானிய மக்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் உள்ள, மதுரையில் அமைந்துள்ள விமான நிலையத்தில் நூதன வசூல் ஒன்று மிகவும் சுதந்திரமாக அரங்கேறி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விமான நிலையத்திற்குள் தனியார் கார் சேவைகள் எதையும் உள்ளே அனுமதிப்பது கிடையாது. இதனால் பயணிகள் ஒன்று தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு நடந்து செல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால் ஏர்போர்ட்டில் இருக்கும் டேக்ஸியில் தான் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நிர்வாகம் கல்லா கட்டி வருகிறது. மேலும் உள்ளே வாகனங்களை நிறுத்த ரூ.500க்கும் மேல் கட்டணம் பெறப்படுகிறது.

பிரபல விஜய் டிவி சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய பிரபலம்.., இனி அவருக்கு பதில் இவர் தான்!!

ஆனால் அது 5 நிமிடங்களுக்கு மட்டுமே. இது குறித்த விபரங்கள் விமான டிக்கெட்டில் இடம் பெறுவது கிடையாது. இது தெரியாமல் ஏர்போர்ட்டுக்கு செல்லும் மக்களுக்கு இது சிரமத்தை தான் ஏற்படுத்துகிறது. மேலும் 5 நிமிடத்திற்கு மேல் ஆனால் கட்டாயமாக ரூ.60 எக்ஸ்ட்ராவாக செலுத்த வேண்டி இருக்கும். இதனை வைத்து பார்க்கும் போது, சாமானியர்கள் இந்த விமான நிலையத்திற்கு செல்வதை நினைத்து கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு வசூலில் விமான நிலைய நிர்வாகம் இறங்கியுள்ளது. இது குறித்து பயணிகள் பகிரங்கமாக தற்போது புகார் அளித்து வருகின்றனர். விரைவில் இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here