தமிழகத்தில் வீரியம் எடுக்கும் “மெட்ராஸ் ஐ”.., அரசாங்கம் வெளியிட்ட அதிரடி முடிவு!!

0
தமிழகத்தில் வீரியம் எடுக்கும்
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் "மெட்ராஸ் ஐ".., அரசாங்கம் வெளியிட்ட அதிரடி முடிவு!!
திருநெல்வேலி மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் குறித்து முதன்மை கல்வி அலுவலர் ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளார்.

மெட்ராஸ் ஐ:

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவின் தாக்குதலில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்த நிலையில், தற்போது தான் அதன் வேகம் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்த சமயத்தில் மெட்ராஸ் ஐ சில மாவட்டங்களில் தீவிரமாக பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பொதுவாக மெட்ராஸ் ஐ என்பது கண்ணுக்குழியில், அதாவது விழிக்கும் இமைக்கும் இடையில் ஏற்படும் ஒரு வைரஸ். இந்த வைரசால் தமிழ்நாட்டில் பல மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி ( நாளை மறுநாள் ) பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும்.,,அரசு உத்தரவு!

இந்நிலையில் மெட்ராஸ் ஐ வைரசால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து முதன்மை கல்வி அலுவலர் ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளார். அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்/ஆசிரியர்களுக்கு  மெட்ராஸ் ஐ இருந்தால் கட்டாயம் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட மக்கள் இந்த மெட்ராஸ் ஐ- ஆல் பாதிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  இதனால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here