Friday, March 29, 2024

புதுச்சேரி மருத்துவக் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Must Read

புதுச்சேரியில் மருத்துவப் படிப்பின் மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வு நடத்தக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் இதற்கான இறுதி தீர்ப்பை வரும் டிசம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

மாணவர்கள் வழக்குப்பதிவு

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெற உள்ள மருத்துவப்படிப்பின் மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வில் மாணவர்களுக்கு 27 % சதவீதம் மட்டுமே அரசு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனை எதிர்த்து மாணவர்கள் பெற்றோர்கள் நலசங்கத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

medical students
medical students

அதில் மாணவர்கள் குறிப்பிட்டவை என்னவென்றால் புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரிகளான வெங்கடேஸ்வரா, மணக்குள விநாயகர் மற்றும் பிம்ஸ் ஆகிய மூன்று கல்லுரிகளில் அரசு ஒதுக்கீடாக புதுச்சேரி மாணவர்களுக்கு 27 % இடஒதுக்கீட்டிற்கு பதிலாக 50 % இடஒதுக்கீடாக வழங்கவேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளனர்.

இறுதித்தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர்கள் விடுத்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின்பு நீதிபதி, புதுச்சேரி மாணவர்களுக்கு 50 % இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு சார்பில் அறிவித்தனர்.

madras highcourt
madras highcourt

பின்பு புதுச்சேரி மாணவர்களுக்கு 50 % இடஓதுக்கீடு வழங்கும் வரை மருத்துவ படிப்பின் மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வு நடத்த கூடாது என்று இடைக்கால தடை விதித்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். மேலும் இதற்கான இறுதி தீர்ப்பு வரும் டிசம்பர் 9 ஆம் தேதி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -