சென்னையை மிரட்டும் ‘மெட்ராஸ் ஐ’.,, மருத்துவமனையில் அலைமோதும் மக்கள் கூட்டம்!!

0
சென்னையை மிரட்டும் 'மெட்ராஸ் ஐ'.,, மருத்துவமனையில் அலைமோதும் மக்கள் கூட்டம்!!
சென்னையை மிரட்டும் 'மெட்ராஸ் ஐ'.,, மருத்துவமனையில் அலைமோதும் மக்கள் கூட்டம்!!

சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ நோய் அதிகமாக பரவி வருகிறது. இதையடுத்து நோயாளிகள் என்ன செய்வது, செய்யக்கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மெட்ராஸ் ஐ:

தற்போது மழை காலம் தொடங்கிவிட்டதால் சளி, காய்ச்சல்,இருமல் உள்ளிட்டவைகளால் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். இந்த நோய் பாதிப்பு வகைகளில், ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படும் கண் நோய் பரவுவதும் வழக்கம் தான். இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனைகளில், மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டு அதிகம் பேர் சிகிச்சைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த தொற்றால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதனால் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. மெட்ராஸ் ஐ-யின் அறிகுறிகள், கண் எரிச்சல், விழி பகுதி சிவந்து காணப்படுதல், கண் கலங்கி வெளியேறுதல், இமை பகுதி ஓட்டுதல் போன்றவைகள் தான்.

யூடியூப் பயனர்கள் குஷி ., இதை நாங்க சத்தியமா எதிர்பார்க்கல! இதுவரை இல்லாத புதிய அப்டேட் அறிமுகம்!!

இந்த மாதிரியான அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாமல் உடனே டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக டவல் வைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த தொற்று மற்றவர்களுக்கு பரவும் தன்மை உடையது. மேலும் மருத்துவர் அட்வைஸ் இல்லாமல் எந்த ஒரு மருந்துகளையும் கண்ணில் ஊற்றக்கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here