கீர்த்தி சுரேஷ் போல அழகை கெடுத்து கொண்ட விஜய் சேதுபதி பட நடிகை… ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!!

0

தமிழ், மலையாள சினிமா துறையில் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை மடோனா செபாஸ்டியன். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படங்களில் தனது உடல் எடையை கணிசமாக குறைத்து ஆளே மாறி போய் உள்ளார்.

பிரேமம் என்ற காதல் காவிய படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். அந்த படத்தில் மூன்று  கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.இதுவே மலையாளத்தில் அவருக்கு முதல் படம். அதன் பின்னர் தமிழில் காதலும் கடந்து போகும் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து தமிழ் மொழியில் அறிமுகமானார்.

அதன் பின்னர் கன்னடம்,தெலுங்கு என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பிற்காக ஓரிரு விருதுகளையும் பெற்று உள்ளார். மேலும் இவர் ஹியூமன்ஸ் ஆஃப் சம்ஒன் என்ற ஆங்கில படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஒரு சில படங்களை கைவசம் வைத்து உள்ளார்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.அந்த புகைப்படங்களில் பனியன் மற்றும் கட்டம் போட்ட பேண்ட் அணிந்து கொண்டு விதவித போஸ்களில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் தன்னுடைய உடல் எடையை மிகுந்த  அளவில் குறைத்து மிகவும் மெலிந்த தேகத்துடன் உள்ளார். இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here