இல்லத்தரசிகளே மானிய விலையில் சிலிண்டர்…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மத்திய பிரதேசம்!!

0
இல்லத்தரசிகளே மானிய விலையில் சிலிண்டர்..., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மத்திய பிரதேசம்!!
இல்லத்தரசிகளே மானிய விலையில் சிலிண்டர்..., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மத்திய பிரதேசம்!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட இறக்குமதி செலவை பொறுத்து கேஸ் சிலிண்டரின் விலை மாதந்தோறும் மாற்றம் அடைந்து வருகிறது. இதன்படி, இம்மாதத்திற்கான வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.918.50 ஆகவும், வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.1,695 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநில அரசானது வீட்டு உபயோக சிலிண்டரை மானிய விலைக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, மத்திய அரசின் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா மற்றும் மாநில அரசின் முதலமைச்சர் லட்லி பஹ்னா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு வீட்டு உபயோக LPG சிலிண்டர் ரூ.450 க்கு மானிய விலையில் வழங்கப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. இத்தகைய சிலிண்டருக்கான மீதமுள்ள செலவை மாநில அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மானிய விலைக்கான திட்டம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு ரூ.8.57 கோடி ஊக்கத்தொகை., மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here