Thursday, March 28, 2024

காலமானார் மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் – பிரதமர் இரங்கல்..!!

Must Read

உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 85 வயது மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார் .

டிவிட்டரில் அறிவிப்பு:

இந்த அறிவிப்பை அவரது மகன் அசுதோஷ் டாண்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.காய்ச்சல், சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற புகார்களைத் தொடர்ந்து ஜூன் 11 ஆம் தேதி டான்டன் முதலில் லக்னோவின் மெடண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

பிரதமர் மோடி இரங்கல்:

பிரதமர், கூறுகையில் “லால்ஜி சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கான இடைவிடாத முயற்சிகளைக் கொண்டவர் உத்தரபிரதேசத்தில் பாஜகவை வலுப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஒரு திறமையான நிர்வாகியாக ஒரு அடையாளத்தை வெளிப்படுத்தினார், எப்போதும் பொது நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தார், ஸ்ரீ லால்ஜி டாண்டன் அரசியலமைப்பு விஷயங்களை நன்கு அறிந்தவர்.

ஐபிஎல் போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் – மத்திய அரசுக்கு பிசிசிஐ கோரிக்கை!!

PM Modi
PM Modi

அவர் அடல்ஜியுடன் நீண்ட மற்றும் நெருக்கமான தொடர்பை அனுபவித்தார்” என்று கூறியுள்ளார்.

அரசியல் வரலாறு:

 

Lalji Tandon — Madhya Pradesh Governor
Lalji Tandon — Madhya Pradesh Governor

டாண்டன் 1978 முதல் 1984 வரை மற்றும் 1990-1996 வரை இரண்டு முறை உத்தரபிரதேச சட்டமன்றத்தில் பணியாற்றினார்; 1996 முதல் 2009 வரை மூன்று முறை உத்தரபிரதேச சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக; 15 வது மக்களவையில் எம்.பி.யாகவும் பீகார் மற்றும் மத்திய பிரதேச ஆளுநர் ஆகவும் பணியாற்றினார்.

இறுதிச் சடங்கு:

மாலை 4 மணிக்கு உடல் குலாலா காட் சவுக்கிற்கு கொண்டு செல்லப்படும், அங்கு இறுதி சடங்குகள் செய்யப்படும் மேலும், மக்கள் அரசின் கோவிட் 19 வழிகாட்டுதலின் படி அவரவர் வீட்டிலே இறுதி மரியாதை செய்யவும் உள்ளதாக அசுதோஷ் கூறினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு புதிய நடைமுறை., அரசாணையை வெளியீடு!!!

சமீப காலமாக தமிழகத்தில் அரசு ஆவணங்களை சுலபமாக பெறுவதற்கான நடைமுறைகளை மாநில அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், முன்பு போல் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -